amutha malai polikirathu

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

இலங்கையின் இயற்கைச்செல்வம் சிங்கராஜவனம்


மரங்கள் வெட்டப்பட்டு,காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை வளம் அருகி வரும் இவ்வேளையில், இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே வனமான சிங்கராஜ வனம் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.

 
சுற்றாடல் இயற்கை வள அமைச்சின் கீழுள்ள இலங்கை வனத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் சிங்கராஜவனம் மனிதத்தலையீடுகள் மிகக் குறைந்த வனமாகவும் தாழ்நில மழைக்காடாகவும் விளங்குகின்றது. இலங்கையின் அரும்பெரும் இயற்கைச்செல்வங்களே ஒன்றாகிய இது மனித உயிர்க் கோள ஒதுக்கிடமாக 1978ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.1988 ஆம் ஆண்டில் இவ்வனம் உலக மரபுரிமை தளமாக  க்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

27,643 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வனம் கிழக்கு மேற்காக சுமார் 21 கிலோமீற்றர் நீளமும் வடக்கு தெற்காக 3.7 கிலோமீற்றர் அகலமும் கொண்டது. இவ்வனம் இரத்தினபுரி மாவட்டத்தால் உரிமை கோரப்பட்டாலும் காலி, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வியாபித்துள்ளது. சிங்கராஜ வனத்தை கலவான,றக்வான, கனிதும, தெனியாய ஆகிய நான்கு கிராமங்களுக்கூடாகவும் சென்றடையலாம்.
                                                                               

இவ்வனப்பிரதேசத்தின் வருடாற்த சராசரி வெப்பநிலை 23.6 பாகை செல்சியஸ் ஆகும். அதனால், வருடம் முழுவதும் வறட்சிக்காலமில்லாமல் இருப்பதே இப்பிரதேசத்தின் சிறப்பம்சமாகும்இவ்வனத்தின் தரைப்பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 200 மீற்றர் முதல் 1300 மீற்றர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜ வனத்திலுள்ள மிக உயர்ந்த மலைச் சிகரமாக சுமார் 1150 மீற்றர் உயரமான கினிப்பிட்டி கலயைக் கூறலாம்.

இது தவிர, திப்பொத்கல ,மவுலவெல்ல, கொஸ்குலான , சிங்ககல, கொகிலரம்ப, தொட்டலுகல போன்ற சிகரங்களும்  இவ்வனத்தினுள் காணப்படுகின்றன. களுகங்கையின் கிளை நதியும் ஜின கங்கையின் கிளை நதியும் இம்மலைத்தொடர்களை ஊடறுத்துப் பாய்வது இதன் அடுத்த அம்சமாகும்.

இவ்வனத்தில் உள்ள அதிகமகன மரங்கள் உயரமாகவும் நேராகவும் வளர்ந்து காணப்படுகின்றன. இம்மரங்கள் 35 மீற்றர் முதல் 50 மீற்றர் வரை உயரமும் கொண்டவை. இவ்வனத்தில் இனங்காணப்பட்டுள்ள 211 வகையான மர இனங்களில் 66% மரங்கள் இலங்கைக்கே உரிய மரங்களாகும். அத்துடன்,25 வகையான இலங்கைக்கே உரிய தாவர வகைகளில் 13 வகைகள் சிங்கராஜ வன்த்தில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

சுதேச பறவையினங்களில் 95% சிங்கரகஜ வனத்தில் காணப்படுகின்றன. இவ்வனத்தில் ‘சாம்பூ’ இன மான்கள் அதிகமாக வாழ்கின்றன. சுண்டெலி மானகளும் குரைக்கும் மான்களும் காணப்படுகின்றன. ஊதாமுக இலைக்குரங்குகள், விரியன் பாம்புகளும் இவ்வனத்தில் ஆங்காங்கே நடமாடுகின்றன. தவளைகள், தேரைகள் என்பன இங்குள்ள அருவிகளிலும் சேற்று நிலங்களிலும் சுதந்திரமாக, இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்கின்நன.

இவ்வனத்தில் தாவர அடர்த்தி மிகக் குறைவாகவே காணப்படுவதால் இங்கு மிருகங்களும் பறவைகளும் மிக இலகுவாகவும் சுதந்திரமாகவும் நடமாட முடிகின்றது. சிங்கராஜ வனத்தைச் சுற்றி சுமார் 22 கிராமங்கள் காணப்பட்ட போதிலும், வருகந்தேனிய, கொலந்தொட்டுவ ஆகிய கிராமங்கள் வனத்திற்குட்பட்டே காணப்படுவது வனத்தின் தனித்துவத்தைப் பாதிப்பதாக அமைகின்றது.    

2 கருத்துகள் :

பின்பற்றுபவர்கள்