amutha malai polikirathu

வியாழன், 26 ஜூலை, 2012

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.
படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?
1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.
2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.
இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.
அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கூந்தலை வளர்ச்சியடையும்.


உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ‘வாட்டர் பேஸ்ட் மேக்கப்’ போட்டுக் கொள்ளுங்கள். ஓயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மாற்றம் செய்ய முடியாமல் இருக்கிறதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.

பின்பற்றுபவர்கள்