amutha malai polikirathu

வெள்ளி, 16 நவம்பர், 2012


பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
உடை அலங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப்படுத்தப்படுபவை ஏராளம்.
ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் அழகு கூடும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
தன்னம்பிக்கை
அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும் என்பது அவர்களின் கூற்று. உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும் என்பது வல்லுநர்களின் கருத்து.

அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக அதிபராகியிருக்கும் 13வது தலைவர் என்ற பெருமையை பாரக் ஒபாமா பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் 44வது அதிபராக அவர் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்கிறார்.

அமெரிக்க வரலாற்றில் அதிக நாட்கள் அதிபராக இருந்தவர் ப்ராங்ளின் ரூஸ்வெல்ட். மூன்று முறை, அதாவது 12 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தவர், நான்காம் முறையும் அதிபராகி 83 நாட்களில் இறந்துவிட்டார்.
1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டப்படி, ஒரு தலைவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரு தடவை அதிபராக இருக்கலாம். அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் போட்டியிடலாம்

வியாழன், 1 நவம்பர், 2012

முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உறவு வைத்தாக வேண்டும் என்ற ஐதீகம் நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.


அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.
குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.

பின்பற்றுபவர்கள்