amutha malai polikirathu

திங்கள், 13 ஏப்ரல், 2015

விஞ்ஞான வளர்சிகள் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில்  விஞ்ஞான ஆராய்சிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட விதத்தில் இன்றைய உலகிற்கு சவால் விட்டுக் கொண்டு காத்திருப்பது தான் "பேர்முடா முக்கோண வலயம்". 
பேர்முடா முக்கோண வலயம் எனக் கூறப்படும் இந்த கடல்பரப்பானது ஏறத்தாள  500000  தொடக்கம் 1.5 மில்லியன் பரப்பளவு உடையது. அது மட்டுமல்லாது இது வடஅமெரிக்காவின் தென் பகுதியை அண்மித்த புளோரிடாவையும் அதிலிருந்து தென்மேற்காக போட்டோரிக்கோ மற்றும் தென்கிழக்காக பேர்முடா தீவு என்பனவற்றையே எல்லைகளாகக் கொண்டுள்ளது. இவை வெறும் கற்பனை எல்லைகளாகும். 
பல ஆண்டாண்டு காலமாக இந்தப் பகுதிக்குள் வரும் அதிக எண்ணிக்கையான கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொலைந்து போனமை உட்பட 200க்கும் அதிகமான சம்பவங்களை அடுத்து 1964 ஆம் ஆண்டு வி. கடிஸ் என்ற எழுத்தாளர் ஆகொஷி புனைகதை சஞ்சிகையொன்றுக்கு எழுதிய ஆக்கத்தில் முதல் முதலாக இப்பிரதேசத்தை பேர்முடா முக்கோண வலயம் என்று பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு சார்ல்ஸ் பேளிட்ஸ் என்பவர் எழுதிய பெர்முடாவின் முக்கோணம் என்ற புத்தகம் மக்களின் இது தொடர்பான ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது எனலாம். 

பெர்முடா கடல்பரப்பில் நடந்த பிரபலமான சம்பவங்கள் உங்களுக்காக:        

1492 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் நாடுகாண் பிரயாணத்தில் ஈடுபடிருக்கையில் இந்தப் பிராந்தியத்தை கடக்கும் போது வானத்தில் சில மர்மமான வெளிச்சங்களை அவதானித்து உள்ளார்கள்.  இதனை தனது நாட்குறிப்பில் கொலம்பஸ் "வானத்திலிருந்து நெருப்புக் குழம்பு போன்று விழுவதைக் கண்டேன். அது எரி நட்சத்திரமாகவும் இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்,

பெர்முடா தளத்தில் நடந்த இன்னொரு சுவடு 1892 ஆம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து 400 மைல் தொலைவில் கடலுக்கடியில் தொலைந்துபோன  Celeste எனும் கப்பலாகும். இது ஜெனோவா நோக்கிப் புறப்படிருந்தது. திடீரென மாயமாக மறைந்த இக்கப்பலின் 10 கொண்ட மாலுமிகள் பற்றிய தகவல் இதுவரை மர்மமாகவே உள்ளது. ஆனால் இக்கப்பல் போர்த்துக்கல் கரைகளில் வெறுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இப்பிரதேசத்தை மாயஜாலமாக காட்டியது

மேலும் இந்த மர்மத் தொடரில் உலகை தன் பக்கம் திருப்பிய நிகழ்வு 1945 ஆம் ஆண்டில் நடந்த Flight 19 என்று சொல்லப்படுகின்ற 5 குண்டுவீச்சு விமானங்களின் திடீர் மறைவாகும். புளோரிடா கடற்தள விமானத் தளத்திலிருந்து 5 யுத்த குண்டுவீச்சு விமானங்கள் தமது வழமையான பயிற்சிக்காக புறப்பட்டன. இந்த விமான ஓட்டப்பாதை 160 மைல்கள் கிழக்காகவும், 40 மைல்கள் வடக்காகவும் பறந்து பின் ஆரம்ப தளத்துக்கு திரும்புவதாக அமைக்கப்பட்டிருந்தது. இவை அமெரிக்காவின் அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ள விமானங்களாகும். இவர்கள் அனுபவமற்ற பயிலுனர் விமானிகளாவர். ஒவ்வொன்றிலும் 3 பேர் வீதமும், ஒன்றில் 2 பேரும் பயணித்தனர். இவர்களை வழிநடத்திச் சென்ற லெப்டினன்ட் சார்ல்ஸ் டேய்லர் என்ற விமானியே அன்பவமுள்ள விமானியாவார்.        

முதலாவது விமானம் பி.ப 2:02 க்கு புறப்பட்டது. அப்பொழுது அது மணிக்கு 200 கீ.மீ வேகத்தில் பறப்பதாக செய்தி அனுப்பியது. ஏறத்தாழ ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பிறகு விமானத்தில் கோளாறு என்றொரு சமிக்ஞை வந்தது. குறிப்பிட திட்டப்படி இது விமானம் தளத்திற்கு திரும்பி வந்திருக்க வேண்டிய நேரமாகும். விமானத் தளபதியிடமிருந்து குழப்பமான செய்தி ஒன்று வந்தது. "விமான கட்டுபாடு மையத்துக்கு, நாம் பாதை தவறிவிட்டோம்; தரைப்பாதை எதுவும் எமது பார்வை மட்டத்தில் இல்லை". "நீங்கள் இப்போது எங்கு பறந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்ட போது "எங்களால் எதுவும் தெளிவாகக் கூற முடியவில்லை " என்ற செய்திகளே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தன.  "மேற்கு நோக்கிப் பறவுங்கள்" என்று கூறப்பட போது "எங்களால் எது மேற்கு, கிழக்கு என்று புரியவில்லை; எல்லாமே புதிராக இருக்கிறது" என்று செய்தி வந்தது. பினர் விமானத்தினுள் விமானிகள் அலறும் சத்தம் விமானக் கட்டுப்பாடு மையத்தில் உணரக்கூடியதாக இருந்தது. பி.ப. 2:45 மணியளவில் "எமது இடத்தை குறிப்பாக தெரிவிக்க முடியவில்லை எனினும் விமானத்தளத்திலிருந்து ஏறத்தாழ 225 மைல்களில் பறந்து கொண்டிருக்கிறோம்" என்ற செய்தி பதிவாகியது. உடனடியாக 13 பேர் கொண்ட மீட்புக்குழு குண்டுவீச்சு விமானங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டது. 5 நிமிடங்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட நிலையில் மீட்புக்குழுவும் மாயமாக மறைந்துவிட்டது. உடனடியாக கடற்படை, விமானப்படை என்பன குறித்த கடல்பரப்பில் தீவிர தேடுதல் நடத்தின.  Flight 19 விமானங்கள் ஐந்தையும், மீட்புக்குழு சென்ற விமானத்தையும் சகல இடங்களில் வலை வீசித் தேடியும் அவற்றின் சிறு துரும்பு கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அழிந்து போன விமானங்களின் பகுதிகள் கூட கடல்பரப்பில் மிதக்கவில்லை.  

இவ்வாறு உலகினை உலுக்கிய பல சம்பவங்களை தன்னகத்தே கொண்ட பேர்முடா முக்கோண வலயமானது இன்றுவரைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது என்பது மறுக்கவோ, மறக்கவோ முடியாத ஒரு விடயமாகும்.  

இனிவரும் காலங்களிலாவது இதன் புதிர் முடிச்சு அவிழுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   

Article 2

அத்திலாந்திக் சமுத்திரத்தில் கரீபியன் கடலையடுத்து மேற்கிந்தியத் தீவுகளான கியுபா, யமேக்கா, போட்டோஷிக்கோ முதலான தீவுகளுக்கு வடக்கே ஒரு முக்கோணப் பரப்பு அதிசயங்களையும் பயங்கரங்களையும் உள்ளடக்கிய பிரதேசமாக விளங்கி வருகின்றது. U.S.A  இன் புளோரிடாக்குடா நாடு, போட்டோஷிக்கோ தீவு, பேர்முடாதீவு ஆகிய மூன்றிடங்களும் இணைந்து இவ் மர்மம் புதைந்த முக்கோணி உருவாகின்றது. ஏறத்தாள 40 இலட்சம் சதுர km சமுத்திர நீர்ப்பரப்பினை பேர்முடா முக்கோணி உள்ளடக்கியது.

பேர்முடா முக்கோண பிரதேசத்தினுள் நுழையும் கப்பல்கள் எங்கு சென்றன என்று அறிய முடியாத விதத்தில் மறைந்து போயினவாம். கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு மேல் ஐம்பதுக்கும் மேற்பட்ட கப்பல்களும் இருபதுக்கும் அதிகமான விமானங்களும் வந்த சுவடே தெரியாமல் மாயமாக மறைந்து போயின. இதன் பின் இவ் முக்கோணம் “Devils Triangle” (பிசாசு முக்கோணி ) என அழைக்கப்பட்டது. இந்த முக்கோண பரப்பினுள் அடங்குகின்ற தீவுக்கூட்டங்கள் பலவாகும். புளோரிடாவையும் இணைக்கும் கோட்டில் பகமாத்தீவுகள் உள்ளன. முக்கோண பிரதேசத்தினுள் ஒரு முனையான பேர்முடாத்தீவு 16ம் Áற்றாண்டு “யுவான் பேர்முடா” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பேர்முடாத்தீவுக்கூட்டத்தில் சுமார் 360 மிகச்சிறிய தீவுகள் உள்ளன.அமெரிக்காவின் கபீர் படைத்தளங்களுள்ளன. எனவே தீவுகூட்டங்களை எல்லையாக கொண்டே பேர்முடா மர்மப் பிரதேசமாகவே உள்ளது. முதன்முதலில் 1945இல் பேர்முடாமுக்கோணிக்கு மேல் வானத்தில் பறந்த ஐந்து குண்டு வீச்சு விமானங்கள் காணமல் போயுள்ளன. இந்த மறைவுடன் எல்லோரதும் கவனத்தை பேர்முடாமுக்கோணி கவர்ந்தது. இதை தொடர்ந்து பல வதந்திகள் பரவின. 1968 மே மாதம் U.S.A இன் நீர்மூழ்கிக்கப்பல் “ஸ்கோப்பியன்” பேர்முடா முக்கோணியினுள் காணாமல் போயுள்ளது. இதனால் ஓய்ந்திருந்த பேர்முடா முக்கோணியின் மர்மம் மேலும் புத்துயிர் பெற்றது. இதற்கு பல காரணங்கள் கூறியும் எதுவுமே திருப்தியளிக்கவில்லை.
எனினும்
1. குடாநீரோட்டமெனப்படும் அத்திலாந்திக் நகர்வு என்ற வெப்ப நீரோட்டம் பாய்கிறது.சமுத்திர அடியில் அதேபோன்ற வேகமான நீரோட்டங்களுள்ளன. இவை கப்பல்களின் மறைவிற்கு காரணமாகின்றன.
2. பேர்முடா பிரதேசம் கரீபியன் கபிர் பகுதியாகும்.இப்பகுதியில் ஹரிக்கேன் எனப்படும் சூறாவளி அடிக்கடி வீசுவதால் கப்பல்களையும் விமானங்களையும் இழுத்துச்சென்று அழித்துவிடுகின்றன.
3. பேர்முடா முக்கோண பிரதேசத்தில் நீர் சுழிகளோடு கூடிய “டொனாடோ” எனப்படும் நீர்த்தம்பங்கள் உருவாகின்றன. அவை கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கிவிடுகின்றன. காரணம் மேற்கூறியவற்றில் ஒன்றா? அல்லது இவையனைத்தும் சேர்ந்து ஒன்றா?


0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்